இன்று முதல் எல்பிஜி டேங்கர் லாரிகள் ஓடாது... கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்!

இன்று நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இது குறித்த அறிவிப்பின் படி இன்று மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்த தகவலை தென் மண்டல எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதால், கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. சிலிண்டர் புக் செய்யும் போது வழக்கமான நேரத்தை விட இம்முறை தாமதமாகவே சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?