காஸ் டேங்கர் விபத்து… மும்பை–பூனே நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்!

 
acc
 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து புனே நகரை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராய்காட் மாவட்டம் ஆதோஷி சுரங்கப்பாதை அருகே காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் புரோப்பிலீன் காஸ் இருந்ததால் அபாய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

விபத்துக்குப் பிறகு லாரியை அகற்ற நெடுஞ்சாலை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக முயன்றனர். ஆனால் லாரியை அப்புறப்படுத்துவதில் சிரமம் நீடித்தது. மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தால் மாலை 5 மணி முதல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. சுமார் 12 கிலோமீட்டர் தொலைவு வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

இந்த பகுதி வனப்பகுதியாக இருப்பதால் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் சுங்கக் கட்டணம் திருப்பித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் கோஷமிட்டனர். பின்னர் போக்குவரத்து போலீசார் மாற்று வழியில் வாகனங்களை அனுமதித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!