9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் கேஸ் இணைப்பு... பிரதமர் மோடி உறுதி!
நரேந்திர மோடி இன்று திருச்சி மாவட்டம் பஞ்சபூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல நலத் திட்டங்களை தொடக்கி வைத்தார். இதில் ஈரோடு மாவட்டத்தில் ரூ.3,680 கோடி மதிப்பிலான எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டமும் அடங்கும். மேலும் கிராமப்புறங்களில் சாலை வசதியை மேம்படுத்த 370 கிலோமீட்டர் சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் இந்திய ரயில்வே சார்பில் 5 புதிய ரயில் சேவைகளையும் அவர் காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார். நாகர்கோவில் – சார்லபள்ளி அம்ரித் பாரத் ரயில், கோவை – தன்பாத் அம்ரித் பாரத் ரயில் உள்ளிட்ட பல புதிய ரயில்கள் இயக்கம் தொடங்கின. இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கு புதிய போக்குவரத்து வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, இயற்கை எரிவாயு திட்டத்தின் மூலம் 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் வழியாக சமையல் எரிவாயு கிடைக்கும் என கூறினார். மேலும் 200 வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி மேலும் வேகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
