365 நாளாக மாற்றமின்றி ஒரே விலையில் பெட்ரோல் , டீசல்!!

 
பெட்ரோல்


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. தினசரி பெட்ரோல், டீசல் விலைகளும், மாதம் இருமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்தன.

பெட்ரோல்

இதனால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். ஒரு வருடம் முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு  ரூ100ஐ தாண்டிய நிலையில் பெரும் எதிர்ப்புக்களும், கண்டனக் குரலக்ளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இதனையடுத்து சற்றே குறைத்து மத்திய மாநில அரசுகள் ரூ100ஐ தொட்ட நிலையில் லிட்டருக்கு ரூ102.63 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.

இனி மாஸ்க் போடலன்னா பெட்ரோல், டீசல் கிடையாது!

இதனால் நடுத்தரமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 35 அல்லது 0.59% என சரிந்து ரூ.5,922 ஆக உள்ளது. ஆனால், ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தொடர்ந்து 365வது  நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மே21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web