மாலத்தீவில் சொகுசுப் படகு கவிழ்ந்து கோர விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர் கௌதம் சிங்கானியா!

 
மாலத்தீவு மாலத்தீவு

மாலத்தீவின் நீலக் கடலில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அதிவேகப் படகு ஒன்று, எதிர்பாராத விதமாக நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தப் படகில் ரேமண்ட் நிறுவனத்தின் தலைவரான கௌதம் சிங்கானியா மற்றும் சில வெளிநாட்டு நண்பர்கள் என மொத்தம் ஏழு பேர் பயணம் செய்துள்ளனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்தில் படகு நிலைகுலைந்த நிலையில், கடலில் தத்தளித்த கௌதம் சிங்கானியா அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாகவும் அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின்போது படகில் இருந்த 5  ஆண்கள் மற்றும் 2 பெண்கள் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். இதில் கௌதம் சிங்கானியா உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட போதிலும், இந்தியாவின் புகழ்பெற்ற கார் பந்தய வீரரான ஹரி சிங் உள்ளிட்ட இரண்டு இந்தியர்களைக் காணவில்லை என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழமான கடல் பகுதியில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினர் மற்றும் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் சிங்கானியாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. (X/ @SinghaniaGautam)

கடலில் மாயமானவர்களைத் தேடும் பணி இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், மீட்கப்பட்ட மற்ற மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட போதிலும், தன்னுடன் வந்த சக நண்பர்கள் மற்றும் வீரர்கள் மாயமானது குறித்து கௌதம் சிங்கானியா மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார். விபத்தில் சிக்கிய அனைவரும் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என அவர்களது குடும்பத்தினரும் நண்பர்களும் உருக்கமாகப் பிரார்த்தித்து வரும் நிலையில், மாலத்தீவு அரசு இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!