முரட்டு வில்லனாக அறிமுகமாகும் கௌதம் வாசுதேவமேனன்!!

 
கௌதம் வாசுதேவமேனன்

தமிழ் திரையுலகில் முத்திரை இயக்குநர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவமேனன்.  இவர் வில்லனாக புதிய அறிமுகம் ஆவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிட்லிஸ்ட் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  

கௌதம் வாசுதேவமேனன்

கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான  சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன் இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கானா கலாச்சார பாடலுக்காக கூட்டணி அமைத்த ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன்!


இவர்களுடன்  நடிகை சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உட்பட  பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்  வில்லனாக நடித்திருக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இந்த படத்திற்கான ஒளிப்பதிவு ராம்சரண், படத்தொகுப்பு ஜான், கலை இயக்கம் அருண் என முழு குடும்ப பொழுதுபோக்குபடமாக  உருவாகி வருகிறது.  அதே நேரத்தில் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன் திரில்லராகவும் இந்த படம் இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைய இருக்கும் நிலையில் படத்திற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web