இந்தியாவில் பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் !
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்தியாவில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்துள்ளார். இன்று காலை இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபராக பொறுப்பேற்ற பின் ஆசிய நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் மெர்ஸ் இருவரும் குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய மையமாக விளங்கிய இந்த ஆசிரமத்தில் அவர்கள் இருவரும் சிறிது நேரம் தங்கி பார்வையிட்டனர். பின்னர் சர்வதேச பட்ட திருவிழாவை தொடங்கி வைக்க சென்றனர்.

இதன்பின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இரு தலைவர்களும் சந்தித்து இந்தியா–ஜெர்மனி மூலோபாய நட்புறவு குறித்து மறுஆய்வு செய்ய உள்ளனர். ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம், முதலீடு, பசுமை எரிசக்தி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இருவரும் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, பின்னர் பெங்களூரு சென்று ஜெர்மனி நிறுவனங்களை பார்வையிட உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
