நெகிழ்ச்சி வீடியோ... ஹனுமன் பாடலைக் கேட்டு பதில் அளிக்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்!

 
ஹனுமன் பாடலைக் கேட்டு பதில் அளிக்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செல்லப்பிராணிகள் செய்யும் சில வித்தியாசமான செயல்களை சமூக வலைதளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர்.  ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த செல்லப் பிராணி ஒன்று ஹனுமன் பாடல் கேட்டதும் அதற்கு பதில் அளிப்பது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதன்படி  அந்த வீடியோவில் “ரக்னர்” என்ற நாய் ஒன்று வீட்டின் சுவர் அருகே அமைதியாக படுத்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த நாயின் உரிமையாளர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு பாடலாக வைக்கிறார்.  எந்த இசையை கேட்டும் ரக்னர் எந்த ஒரு அசைவும் காட்டாமல் அமைதியாக ஓய்வெடுத்தது.
அதைத்தொடர்ந்து அந்த உரிமையாளர் ஸ்ரீ ஹனுமன் சாலிசா என்ற பாடலை வைத்ததும் ரக்னர் திடீரென எழுந்து நின்று அந்தப் பாடலுக்கு ஏற்ப தனது கழுத்தை உயர்த்தி அந்தப் பாடலை பாடும் பாடகரோடு  இணைந்து பாடுவது போல குரல் கொடுத்தது. இதனை அந்த நாயின் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோ தற்போது 11.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web