"கல்யாணம் பண்ணி வைங்க"...கலெக்டர் ஆபீஸில் தரையில் அழுது புரண்ட வாலிபரால் பரபரப்பு!

 
க்ட்க்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஒரு நபர் திடீரென "எனக்கு இப்பவே கல்யாணம் செய்து வைக்க வேண்டும்" என்று கூறி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும் ஒரு நிமிடம் திகைக்க வைத்தது. வழக்கமாக நிலப் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கைகளுடன் மக்கள் வரும் நிலையில், இந்த வினோதக் கோரிக்கை ஆட்சியர் அலுவலகத்தையே சிறிது நேரம் பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ஈரோடு

ஈரோடு புதுமைக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் அல்லா பக்கல். இவர் தனது தாய் நூர்ஜகானுடன் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். நீண்ட நாட்களாகத் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்ற வேதனையில் இருந்த அல்லா பக்கல், அரசு சார்பில் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், திருமணத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரி மனு அளிக்க வந்திருந்தார். மனநலம் சற்று பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் இவர், அதிகாரிகளிடம் தனது கோரிக்கையை வலியுறுத்திப் பேசத் தொடங்கிய போது, அங்கிருந்த அதிகாரிகள் அவரை அமைதிப்படுத்த முயன்றனர்.

அதிகாரிகளின் பேச்சைக் கேட்க மறுத்த அல்லா பக்கல், "எனக்கு உடனே கல்யாணம் நடக்கணும்" என்று கூச்சலிட்டபடி அங்கிருந்த பணியாளர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தார். வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். தாயும் மகனும் வெளியே செல்ல மறுத்ததால், போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே அழைத்து வந்தனர்.

5வது திருமணம்

வெளியே வந்த பிறகும் அல்லா பக்கலின் பிடிவாதம் குறையவில்லை. போலீசார் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப முயன்றபோது, அவர் ஆட்டோவில் ஏற மறுத்துத் தரையிலேயே அமர்ந்து புரண்டு அழுதார். "ஐயோ எனக்கு பயமா இருக்கு.. யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்" என்று அவர் போட்ட அலறல் சத்தம் ஆட்சியர் அலுவலக வளாகத்தையே அதிர வைத்தது. இறுதியில் நான்கைந்து போலீசார் ஒன்று சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாகத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், "திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம் என்றாலும், மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சையும், கவுன்சிலிங்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!