உடனே வீட்டை விட்டு வெளியேறுங்க... காஸாவில் இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

காஸா இஸ்ரேல் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நகரத்தின் கிழக்குப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புப் பகுதிகளில் வாழும் பாலஸ்தீனர்களை உடனடியாக வெளியேற அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து, இஸ்ரேல் ராணுவத்தின் அரேபிய செய்தித்தொடர்பாளர் தனது எக்ஸ் தளத்தில், “தீவிரவாத கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களது பாதுகாப்பிற்காக காஸாவின் கிழக்கு பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேறுபடியும் , மேற்கு பகுதிகளிலுள்ள முகாம்களுக்கு இடம்பெயரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஃபாவிலுள்ள டெல் அல்-சுல்தான் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் அஹமத் இல்யாத் முஹம்மது ஃபர்ஹாத் தங்களது படையினரை கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், காஸா நகரத்தில் இஸ்ரேல் ராணுவம் நேற்று ஏப்ரல் 10ம் தேதி முதல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் ஹமாஸ் கிளர்ச்சிப்படையின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!