கொரோனாவை சமாளிக்க தயாராகுங்க... மாநில அரசுகளுக்கு சுகாதாரத் துறை அலெர்ட்!
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் தொற்று பர வரும் நிலையில் இந்தியாவை பொறுத்தவரை கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஜூன் 4 ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 4,302 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் தற்போது வரை 44 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இணை நோய் உள்ளவர்கள் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
