தவெகவில் அதிரடி... மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக GetOut கையெழுத்து இயக்கம்!

 
தவெக


தமிழகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தற்போது 2ம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிரம்மாண்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய் உட்பட  கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தவெக


இந்த விழாவுக்கு தேசிய அளவில் அறியப்பட்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா ஒன்றாக அமர்ந்திருந்தனர். அதன் பிறகு விழா தொடங்கியது.முதல் நிகழ்வாக , தற்போது தமிழக அரசியலில் பிரபலமாக இருக்கும் GetOut எனும் வார்த்தையை முன்னிறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக GetOut எனும் கையெழுத்து இயக்கத்தை கட்சித் தலைவர் விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அடுத்து ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா உட்பட பல  கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

தவெக ஆதவ் அர்ஜுனா
இந்நிகழ்வில் விஜய் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவார் எனவும், 2026 தேர்தல் குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை கட்சி நிர்வாகிகளிடம் அறிவிப்பார் எனவும்  கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து தவெக கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழாவில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலை பாடியிருந்த கிடாக்குழி மாரியம்மாள் விஜய்யை புகழ்ந்து பாடினார். இவ்விழாவினை தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் செய்த நலத்திட்ட உதவிகள் குறித்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web