நாலு மாசத்துல கல்யாணம்... கழிவறையில் குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் வீசிய இளம்பெண்!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

திருச்செந்தூர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா (23). பெற்றோர் இல்லாத நிலையில், தனது பெரியம்மாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவருக்கு வரும் மே மாதம் வீரபாண்டியன்பட்டிணத்தைச் சேர்ந்த ரஜோ என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிருத்திகாவிற்குத் திடீரெனத் தீவிர வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உல்லாசம்

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கிருத்திகாவிற்குத் திடீரென அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குப் பிரசவம் நடந்திருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவரிடம் மருத்துவர்கள் தீவிரமாக விசாரித்த போது, கிருத்திகா உண்மையை ஒப்புக் கொண்டார்.

கிருத்திகா அளித்த வாக்குமூலத்தில், மருத்துவமனையில் இருந்த போது யாருக்கும் தெரியாமல் கழிவறைக்குச் சென்று குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், குழந்தை இறந்தே பிறந்ததால், அந்தப் பச்சிளம் குழந்தையின் உடலை அங்கிருந்த குப்பைத் தொட்டியிலேயே வீசி எறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தது. விரைந்து வந்த போலீசார், கழிவறை குப்பைத் தொட்டியிலிருந்து குழந்தையின் உடலை மீட்டனர்.

குழந்தை

திருச்செந்தூர் மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கிருத்திகாவிற்கும் திருமணம் நிச்சயமாகியிருந்த ரஜோவிற்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான உறவே கிருத்திகாவின் கருவுறுதலுக்குக் காரணம் எனத் தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பே கருவுற்ற விவகாரம் வீட்டிற்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், அவர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குழந்தை பிறக்கும்போதே இறந்ததா அல்லது பிறந்தபின் உயிரிழந்ததா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!