கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து காவல் அதிகாரி பலி; 13 பேர் படுகாயம்!
ஹரியாணா மாநில சூரஜ்குன்ட் கண்காட்சியில் சனிக்கிழமை ராட்சத ராட்டினம் திடீரென சரிந்து பேரழிவை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரி உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | A joyride collapsed at Surajkand Mela in Faridabad, Haryana earlier this evening. 9 people injured and admitted to a hospital. One Police Inspector, who was trying to save people, died.
— ANI (@ANI) February 7, 2026
Visuals from the spot as Forensics team spots the beret cap of the deceased… pic.twitter.com/eB1JqPDAik
தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆணையர் ஆயுஷ் சின்ஹா மற்றும் சுற்றுலா மேலாண்மை இயக்குனர் பார்த் குப்தா உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் தெரிவித்ததாவது, மாலை 6 மணியளவில் சுமார் 15 பேருடன் ராட்டினம் திடீரென சரிந்ததாகும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மீட்பு நடவடிக்கையின் போது கண்காட்சியின் கடை நடத்துனர் ராகவ்விற்கும் காயம் ஏற்பட்டது.

முன்னதாக, மாலை 5 மணியளவில் கண்காட்சி திடலின் 2வது வாயில் இடிந்து விழுந்ததால், குழந்தை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். இது கண்காட்சியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமென மீண்டும் உணர்த்துகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
