கேரள கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம் - கடலுக்குள் பத்திரமாக விட்ட பொதுமக்கள்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் கடற்கரையில், மீனவர்களின் வலையில் சிக்கிய ஒரு ராட்சத திமிங்கலம் பின்னர் கரை ஒதுங்கியது. அந்தத் திமிங்கலம் உயிருடன் இருப்பதை அறிந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உதவியுடன், சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்தத் திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விடப்பட்டது.
கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இணைந்து மீண்டும் கடலுக்குள் தள்ள முயன்றனர். இது தொடர்பாகக் கடலோரக் காவல்படை மற்றும் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரமாகக் கடற்கரையிலேயே கிடந்த அந்தத் திமிங்கலத்தை, முதலில் கடல் அலையின் வேகத்தைப் பயன்படுத்தித் தள்ள முயற்சி செய்தனர். ஆனால், அது அங்கிருந்து நகரவில்லை. இறுதியாக, படகு மூலம் கயிறு கட்டி இழுக்கப்பட்டு, திமிங்கலம் பத்திரமாக ஆழ்கடலுக்குள் திருப்பி விடப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
