பைடனுக்கு 7.5 காரட் வைரம், சந்தனப்பெட்டி பரிசளித்த மோடி!!

 
சந்தனப்பெட்டி வைரம்

இந்திய பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு , நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.  விமான நிலையத்தில் கொட்டும் பனியிலும், மழையிலும் அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் . வெள்ளை மாளிகையில்  ஜனாதிபதி ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் இருவரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  


மோடிக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் விருப்ப உணவுகளான பாஸ்தாவும், ஐஸ்கிரீமும்  இடம் பெற்று இருந்தன.  அதிபர் பைடனுக்கு சந்தனப்பெட்டி பரிசளித்த பிரதமர் மோடி வாஷிங்டன் டி.சி., அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி சிறப்பு சந்தனப்பெட்டி ஒன்றை பரிசளித்தார். ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்பு வாய்ந்த கைவினை கலைஞர் மூலம் இந்த சந்தன பெட்டி உருவாக்கப்பட்டது.  

வைரம்

அதில், சிறப்பான நறுமணமும் மற்றும் கலை நுணுக்கங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டும் உள்ளன. அந்த சந்தன பெட்டியுடன், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரை சேர்ந்த வெள்ளி கொல்லர்கள் உருவாக்கிய விநாயகர் சிலை மற்றும் விளக்கும் பரிசாக வழங்கப்பட்டது. இத்துடன்  பஞ்சாப் நெய், ஜார்க்கண்ட் டஸ்ஸார் பட்டு உட்பட  10 பொருட்களும் பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தன.   இது தவிர அமெரிக்க முதல் பெண்மணியான   ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web