பேரவைத் தேர்தல் கூட்டணி முடிவு மேலிட கையில்... கிரிஷ் சோடங்கர் பளிச் பதில்!
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்ற தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு அவர் இதை கூறினார். இந்த கூட்டத்திற்கு 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 30 பேர் பங்கேற்கவில்லை.

மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் கட்சியின் அமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். புதிய மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் 6 மாதங்கள் கண்காணிக்கப்படும் என்றார். பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் தேர்வு பணிகள் தொடங்கியுள்ளதாகவும், கூட்டணி தொடர்பான முடிவை அகில இந்திய தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
