10ம் வகுப்பு மாணவனுடன் ஓடிச் சென்ற இளம்பெண்... டியூஷன் படித்ததில் விபரீதம்!

 
ராகுல்

சென்னையில் 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுவன், டியூஷனுக்கு சென்று வந்த நிலையில், டியூஷன் சொல்லிக் கொடுத்த ஆசிரியையின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், டியூஷன் சொல்லிக் கொடுத்த ஆசிரியையின் 22 வயதுடைய தங்கை மாணவனை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளம்பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

10ம் வகுப்பு மாணவனுடன் இளம்பெண் மாயமான நிலையில், இது குறித்த புகாரின் பேரில் இளம்பெண்ணை பாண்டிச்சேரி சென்று அழைத்து வந்த போலீசார் கைது செய்தனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வீட்டில் டியூஷன்  படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி வெளியில் சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் எம்.ஜி.ஆர்., நகர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுவன் தனக்கு டியூசன் சொல்லிக் கொடுத்த ஆசிரியையின் தங்கையான, 22 வயது இளம்பெண் மற்றும் ராகுல் (19) என்ற இளைஞருடன், பாண்டிச்சேரி ஓடிச் சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து பாண்டிச்சேரி சென்ற போலீசார் 3 பேரையும் அழைத்து வந்தனர். இளம்பெண் மற்றும் ராகுல் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனும் இளம்பெண்ணும் காதலித்து வந்ததும், அதற்கு ராகுல் உதவியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web