பேருந்தில் திடீரென மயங்கி சரிந்த சிறுமி… மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர்!

 
பேருந்து


 
கேரள மாநிலத்தில்  நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணம் செய்து  கொண்டிருந்தார்.  உடல்நலக் குறைபாடு காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. 
இதனால் பதட்டம் அடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி  வேண்டுகோள் விடுத்தனர்.  அவர்கள் கூறியதை கேட்டு ஓட்டுநர் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை விரைவாக ஓட்டி சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். இதனைத்தொடர்ந்து ஓட்டுநரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web