லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு... இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை!

 
லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு... இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை!  


சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியில் வசித்து வருபவர்  செந்தில்நாதன் - யாமினி தம்பதி. இவர்களது மகள் 10 வயது சௌமியா.  புரசைவாக்கத்தில் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தார்.  யாமினியே தினமும்  தனது மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். அந்த வகையில் நேற்று காலை வழக்கம் போல் இருசக்கர வானத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். 

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு..!!
அப்போது,  பேப்பர் மில்ஸ் சாலை, வால்கிங்சர் சாலை சந்திப்பு அருகே வரும்போது  நிலை தடுமாறி யாமினியும், சிறுமி சௌமியாவும்  கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,  திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் பொதுசாலையை பயன்படுத்த சென்னையில் தடை இருந்து வருகிறது.  குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகள் அதிகமாக உள்ள அந்த சாலையில் கனரக வாகனம் எவ்வாறு வந்தது என்பது குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

உயிரிழப்பு

இதனையடுத்து தண்ணீர் லாரி பொது சாலையில் சென்றதை தடுக்க தவறிய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  குறிப்பாக  போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  மேலும்  போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்  காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது