சிறுமி பாலியல் வன்கொடுமை... 70 வயது முதியவருக்கு 'சாகும் வரை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில், குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவரின் பெற்றோரை மிரட்டிய அவரது மகன் மற்றும் மகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 16 வயது சிறுமி ஒருவரைத் தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கபாண்டி (70) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இது குறித்துத் தங்கபாண்டியிடம் சிறுமியின் பெற்றோர் தட்டிக் கேட்டபோது, அவரது மகள் வேதசெல்வி (42) மற்றும் மகன் ராஜா (34) ஆகியோர் சிறுமியின் பெற்றோருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்: குற்றவாளி தங்கபாண்டிக்கு இயற்கையான மரணம் ஏற்படும் வரை (ஆயுள் முழுவதும்) சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கொலை மிரட்டல் விடுத்த அவரது மகள் வேதசெல்வி மற்றும் மகன் ராஜா ஆகிய இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.பாராட்டு: இந்த வழக்கைச் சிறப்பாகப் புலனாய்வு செய்து, உரியச் சாட்சிகளை ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ரசீதா மற்றும் அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
