வாரந்தோறும் 3,380 கி.மீ விமானத்தில் பயணித்து கல்லூரி செல்லும் மாணவி!

அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டில் வசித்து வருபவர் 30 வயது நாட் செடிலோ என்ற சட்டக் கல்லூரி மாணவி,. இவர் தனது படிப்பை தொடர்வதற்காக ஒவ்வொரு வாரமும் 3,380 கிலோமீட்டர் விமானத்தில் பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மெக்சிகோவிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவின் மான்ஹாட்டனில் உள்ள கல்லூரிக்கு சென்று, வகுப்புகள் முடிந்ததும் செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் வீடு திரும்புகிறார்.
தற்போது தனது இறுதி செமஸ்டரை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடினமான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 2024 சிறந்த காலநிலை மற்றும் மலிவு வாழ்க்கைச் செலவுகளை கருத்தில் கொண்டு, செடிலோவும் அவரது கணவரும் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு குடிபெயர்ந்தனர்.
தனது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடந்த 13 வாரங்களில் மட்டும் விமான பயணங்கள், உணவு மற்றும் தங்குதலுக்காக ரூ.1.7 லட்சம் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அர்ப்பணிப்பு மற்றும் உறுதி, பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!