காதலை தொடர மறுத்த சிறுமி கழுத்தை அறுத்து கொலை முயற்சி... வாலிபர் வெறிச்செயல்!

 
காதலி கொலை முயற்சி

காதலித்து வந்த நிலையில், திடீரென தனது காதலைத் தொடர மறுத்த சிறுமியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த காதலனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை முயற்சியில், படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் வேடசந்தூர், ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பேட்ரிக் சிலுவைமுத்து(19) இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் இவர்களது காதல் விவகாரம் குறித்து அறிந்த நிலையில், சிறுமியைக் கண்டித்தது, தொடர்ந்து சிறுமி பேட்ரிக் சிலுவை முத்துடன் பேச மறுத்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற பேட்ரிக் சிலுவைமுத்து, தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேட்ரிக் சிலுவைமுத்து, சிறுமியை தன் கையில் வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

பிளேடு

இதில் படுகாயமடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேட்ரிக் சிலுவை முத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது