சாய் சுதர்சனுக்கு முன்பு அபிமன்யூவுக்கு வாய்ப்பு கொடுங்க... வைரலாகும் முகம்மது கைஃப் பதிவு !

 
சாய் சுதர்ஷன்


 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம்  மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.  ஜூன் 20 ம் தேதி தொடங்கும்  இந்த போட்டியில்  முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் யாரை களமிறக்குவது என்ற முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது.  


முதல் டெஸ்ட்டில் நம்.4-இல் ஷுப்ம்ன கில், நம்.5-இல் ரிஷப் பந்த் களமிறங்க உள்ளதாக இந்திய அணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சாய் சுதர்சன் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடியதால் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தது.ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகள் அசத்திய வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது.

சாய் சுதர்ஷன்

இந்நிலையில் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் சாய் சுதர்சனுக்கு முன்பாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க அபிமன்யூ ஈஸ்வரனுக்கு முழு தகுதி இருக்கிறது. முதல்தர போட்டிகளில் கிட்டதட்ட 8000 ரன்கள் அடித்திருப்பதை மதிக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ரன்கள் குவித்த சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாமல் தேர்வுக்குழுவினர் தவறு செய்துள்ளனர்.  அதேபோல் அபிமன்யூ ஈஸ்வரனையும் விலக்கி வைத்து தவறிழைக்கக் கூடாது எனக் கூறியுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது