எனக்கு பாதுகாப்பு கொடுங்க... டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய கோவில் பணியாளர்!

 
அஜீத்
 


 
சிவகங்கை  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் 27 வயது  அஜித்குமார். இவரை   நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அஜீத்

சக்தீஸ்வரன், அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக தாக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவிட்டு  அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆதாரமாக தாக்கல் செய்தார். இந்த வீடியோ, அஜித்குமாரின் மரணத்திற்கு காவலர்களின் தாக்குதலே காரணம் என்பதை உறுதிப்படுத்தியது. இதுவே முக்கிய ஆதாரமாக அமைந்த நிலையில்  இதனைத் தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, 5  காவலர்கள் கைது செய்யப்பட்டனர்,
இந்த வழக்கில்  மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சக்தீஸ்வரன் தனது கடிதத்தில், ரவுடிகளுடன் தொடர்பில் உள்ள சில காவலர்கள் ஏற்கனவே தன்னை மிரட்டியதாகவும், இந்த வீடியோ ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

அஜீத்

இதனால், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில்  தற்போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சக்தீஸ்வரனின் வீடியோ ஆதாரம், வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பு  குறித்து  கேள்வி எழுந்துள்ளது.  இச்சம்பவம், காவலர் தாக்குதலுக்கு எதிராகவும், வெளிப்படையான விசாரணைக்கு ஆதரவாகவும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. சக்தீஸ்வரனுக்கு பாதுகாப்பு அளிப்பது  குறித்து டிஜிபி அலுவலகத்தின் முடிவு, இந்த வழக்கின் மேல் நடவடிக்கைகளை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது