வீட்டுக்காரம்மாவுக்கு விடுமுறை கொடுங்க... இன்னைக்கு சர்வதேச பிரியாணி தினம்!

 
பிரியாணி

என்ன பாய்? பக்ரீத்துக்கு பிரியாணி கொடுத்து அனுப்புவீங்கன்னு நெனச்சேன். இப்படி பண்ணிட்டிங்களே....

அடடா இந்த முறை பையன் டெஸ்லால வேலை பாக்குறதால துபாய் போயிட்டேன். அதாங்க கொடுக்க முடியல.

சரி ..சரி... வாழ்த்துக்கள் பாய் ...

அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனை இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம... கம... சுட ச்சுட பிரியாணிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. அதிலும் ஆன்லைன் உணவு டெலிவரி முறை வந்த பின்னர் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும் பிரியாணியின் மகத்துவம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தியர்கள் பிரியாணியை அதிகம் ஆர்டர் செய்துள்ளதாகவும், கடந்த 12 மாதங்களில் 7.6 கோடி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாகவும் ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இன்று (ஜூலை 2ம் தேதி) சர்வதேச பிரியாணி தினத்தை கொண்டாடும் வகையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, இந்தியர்கள் தங்கள் தளத்தில் பிரியாணியை ஆர்டர் செய்தது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அந்த புள்ளி விவரப்படி தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாகவும், பிரியாணியின் மீதான காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் பிரியாணி பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

நசீர்

ஸ்விக்கி நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள் பிரியாணியின் மகத்துவம் குறித்த கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பரப்பி வருகின்றனர். இது தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் கடந்த ஜனவரி 2023 முதல் ஜூன் 15 வரை செய்யப்பட்ட பிரியாணி ஆர்டர்கள் பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது சற்றே திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்தரை மாதங்களில் பிரியாணி ஆர்டர்களில் 8.26 சதவிகிதம் அதிகரித்து உள்ளதாகவும், 2022ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிரியாணி ஆர்டர்கள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

பிளாட்பாரங்கள் மற்றும் சாலையோர கடைகள் மூலம் பிரியாணி வழங்கும் ஒரு லட்சம் உணவகங்கள், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த பிரியாணி உணவில் தனித்துவம் பெற்றவையாக திகழ்கிறது. நறுமணம் மிகுந்த தம் பிரியாணி முதல் காரமான ஐதராபாத் தம் பிரியாணி மற்றும் சுவையான கொல்கத்தா பிரியாணி முதல் மணமிக்க மலபார் பிரியாணி வரை, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு பிரியாணி உணவுக்காக நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை வழங்குகின்றனர் என்றால் சற்றே மலைப்பாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை!

பிரியாணி விற்பனையான உணவகங்கள் அதிகம் உள்ள நகரங்களைப் பொறுத்தவரை ஸ்விக்கியின் ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் பிரியாணியை தயாரித்து வழங்குகின்றன. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பிரியாணி உணவை மட்டுமே தயாரித்து வழங்குவதில் தங்களது பெயரை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது. இருப்பினும், பெங்களூருவில் 24,000 பிரியாணி வழங்கும் உணவகங்களும், அதற்கு அடுத்தபடியாக மும்பையில் 22,000 உணவகங்களும், டெல்லியில் 20,000 உணவகங்களும் உள்ளன.

பிரியாணி

பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை என்று வரும் போது ஐதராபாத்தில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்களை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு வாடிக்கையாளர்கள் 5 மில்லியன் ஆர்டர்களை செய்து தொடர்ந்து 2-வது இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக சென்னை வாசிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை பிரியாணிக்காக செய்து 3-வது இடத்தில் உள்ளனர்.  சுமார் 85 வகை பிரியாணி வகைகளுடன், 35 மில்லியன் ஆர்டர்களுடன் ஐதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த பிரியாணி பிரியர் ஒருவர் ஒரே நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் ரூபாய் 31 ஆயிரத்து 532க்கு ஆர்டர் செய்து பிரியாணியின் மீதான பிரியத்தை உலகுக்கு வெளிக்காட்டி உள்ளார்.

நமக்கு நாக்கு ஊற வைக்கும் நஸீர் பாய் துபாய் போயிட்டதால இந்த ஆண்டு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்கிற கதையாகி விட்டது என்னவோ சோகம் தான் போங்க...

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web