உலக எண்ணெய் சந்தையில் தினமும் 80 லட்சம் பீப்பாய் குறையும்... சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை!

 
எண்ணெய் எண்ணெய்

 

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரிய பாதிப்பு ஏற்படும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 80 லட்சம் பீப்பாய் வரை எண்ணெய் விநியோகம் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக வரலாற்றிலேயே எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கமாக இருக்கலாம் எனவும்  அந்த அமைப்பு தனது மாதாந்திர அறிக்கையில் கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழி தாக்குதலுக்கு பின்னர் உலக சந்தையில் எண்ணெய் விலை கடும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. உலகின் முக்கிய கடல் பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈராக், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலர் வரை உயர்ந்தது. தற்போது அது சுமார் 96 டாலர் அளவில் விற்பனையாகி வருகிறது. சந்தை தட்டுப்பாட்டை சமாளிக்க சர்வதேச எரிசக்தி முகமை உறுப்பினர் நாடுகள் ஒன்றிணைந்து அவசரகால இருப்பிலிருந்து 40 கோடி பீப்பாய் எண்ணெயை சந்தையில் விட முடிவு செய்துள்ளன. இதன் மூலம் சந்தையை ஓரளவு சீராக்க முடியும் என அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!