ஞானசேகரன் குற்றவாளி... அண்ணா பல்கலைக்கழக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

 
 ஞானசேகரன் குற்றவாளி... அண்ணா பல்கலைக்கழக வழக்கில் பரபரப்பு   தீர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அடிப்படையில்  ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆய்வுக்காக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.  ஞானசேகரனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை சென்னை உள்ள மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை.
டிசம்பரில் மாணவி புகார் அளித்த நிலையில் 5 மாதங்களில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  

அண்ணா பல்கலை கழகம்
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து சென்னை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது