வெயில் போயே போச்...!! இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்!!

 
மழை

தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட பல பகுதிகளில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதிகாலை  லேசான சாரல் மழைக்கு பிறகு வானம் மேகமூட்டமாக இருந்தது. காலை 11 மணிக்கு பிறகு  மீண்டும் சென்னை அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், கொளத்தூர், பாடி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் உட்பட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

மழை
வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம்  என நகரின் பல இடங்களில் மழை பெய்து வருவதால், சாலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வில்லிவாக்கத்தில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தால் காய்ந்த மக்களுக்கு இந்த திடீர் மழை பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்  கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருகிறது. இப்போதே தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, பதநீர், கம்மங்கூழ் கடைகள் சாலையோரங்களில் இடம்பிடித்து விட்டன. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் குளிர்ச்சியான செய்தி ஒன்றை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

அதன்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.இன்று மார்ச் 17ம் தேதி வெள்ளிழக்கிழமை தொடங்கி மார்ச் 20ம் தேதி வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். 

மழை
மார்ச் 20 ம் தேதி  தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் .  அதிகபட்ச வெப்பநிலையாக  34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியசும்  வெப்பநிலை நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web