நெருங்குது பக்ரீத்... வகை வகையான ஆடுகள்... களை கட்டியது சந்தை... ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு விற்பனை!

 
ஆடுகள்

நாளை மறுநாள் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக அனுசரிக்கப்பட உள்ளது.இதற்காக இஸ்லாமிய சகோதரர்கள் குர்பானி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் கூடிய ஆட்டு சந்தையில் 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் வாரச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும்  சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் கொண்டு வரப்பட்டது. 

ஆடுகள் விற்பனை

மார்ஷலா ஆடுகள், நெல்லூர் ஜீடிப்பி ரக ஆடுகள், செம்மறி ஆடுகள், கசாயம் ஆடுகள், குட்டி ஆடுகள், மயிலைம்பாடி ரக ஆடுகள், சீனிகிடாய் ரக ஆடுகள், வெள்ளாடுகள், பெங்களூர் ஜமுனாபாரி ரக ஆடுகள் என பல ரகங்களில்  ஆடுகள் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டன.  

இதனால் ஆட்டு சந்தை களைகட்டியது. காலை 8 மணி முதல் இரவு  10 மணி வரை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்   காணப்பட்டது. மேலும் கொண்டுவரப்பட்ட ஆடுகள் பெரும்பாலும் வளர்ப்பு ஆடுகள் என்பதால் உரிமையாளர்களில்  சிலர் விற்பனை செய்யும்  போது,  அழுதுகொண்டே விற்றனர்.

ஒரே நாளில் சந்தையில் ரூ.80,00,000/- ஆடுகள் விற்பனை!

ஆட்டுச்சந்தையில் சராசரியாக ஆடுகளின் விலை ரூ40,000 முதல்  ரூ80,000 வரையும்,  சில செம்மறி ஆடுகள் விலை ரூ90,000  வரையும் விற்பனையானது. இதில் நெல்லூர் ரக ஜீடிப்பி ரக ஆடுகள் தலா ரூ1 லட்சம் வீதம் ஒரு ஜோடி ரூ 2 லட்சம் வரை கூட விலை போனது. அதிகபட்சமாக ஒரு ஆட்டின் விலை ரூ1 லட்சம் வரை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த வாரத்தில் இந்த வகையான ஆடுகள் ரூ85000 வரை விற்பனையானது.

அதே போல் பெங்களூர் ஜமுனாபாரி ஆடுகள் ரூ50,000 வரையிலும், மார்ஷலா ஆடுகள் ரூ75,000  வரையிலும் விற்பனையானது.நேற்று பிற்பகல் வரை நடைபெற்ற விற்பனையில்   ஆடுகள் விற்பனை ரூ4 கோடி வரை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் என வியாபாரிகள்  தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web