தொடர் உச்சத்தில் தங்கம்!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!!

 
தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் வரலாறு காணாத விலை உயர்வினை  சந்தித்து வருகிறது. நடுவில் 2 நாட்கள் மட்டும் அட்சய திருதியைக்காக குறைந்து மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றும் கிராமுக்கு ரூ12 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் , இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ12 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 5642. சவரனுக்கு ரூ96 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 45,136க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம்


தங்கத்தின் விலைஅதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலைகுறைந்துள்ளது. அந்த வகையில் இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ80.20க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 80200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தில் முதலீடு என்பது பல வருடங்களாகவே பாரம்பரிய, பாதுகாப்பான பழக்கமாகவே இருந்து வருகிறது. கொரோனா காலத்தில் பலர் தங்களது வேலைகளை இழந்திருந்த நிலையிலும் பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தனர். ஆனால் அந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக காணப்பட்டது.

Gold Bangles

தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு.அமெரிக்க  பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில்  குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web