ரூ.9 கோடி இருந்தால் நிரந்தர அமெரிக்கா குடியுரிமை - 'கோல்டு கார்டு' விசா திட்டம் அறிமுகம்! டிரம்பின் புதிய குடியேற்றத் திட்டம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறும் புதிய திட்டமான 'கோல்டு கார்டு' (தங்க அட்டை) விசாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். இந்த விசா திட்டத்தின்கீழ், அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குவதன் மூலம் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற முடியும்.
டிரம்ப் முன்னர் இந்த 'கோல்டு கார்டு' விசா திட்டத்தை அறிவித்தபோது, கட்டணம் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.44.98 கோடி) இருக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் அவர் அந்தக் கட்டணத்தைக் குறைத்தார். அதன்படி, இந்த விசா திட்டத்தை டிரம்ப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.

நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு: வெளிநாட்டினர் அமெரிக்க அரசாங்கத்திற்குக் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரக் குடியுரிமை பெற முடியும். கூடுதல் கட்டணம்: 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணம் ஆகாத குழந்தைகளையும் விண்ணப்பத்தில் சேர்க்கலாம். ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் 15,000 டாலர்கள் செயலாக்கக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய டிரம்ப் பேசுகையில், "'கோல்டு கார்டு விசா' என்பது கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விடப் பெரிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும். பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத்துறையால் நிர்வகிக்கப்பட்டு, நாட்டின் நன்மை பயக்கும் காரியங்களுக்காகச் செலவிடப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள், சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தவும் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும்" என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவின் மற்ற விசாக்களைப் போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் இந்த கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்தக் குடியேற்றத் திட்டம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
