தங்கம் அதிரடி சரிவு!! இல்லத்தரசிகள் பெரும் உற்சாகம்!!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது . இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நடுத்தர குடும்பங்களில் தங்கம் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக திகழ்ந்து வருகிறது.

தங்கம்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி  அறிவித்ததன் எதிரொலி காரணமாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.அதன்படி, சென்னையில் இன்று  ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரு40 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5600க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.44,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

 கடந்த 5 நாட்களில் தங்கம் விலை ரூ.720 குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில்  வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.  இன்றைய விலை நிலவரப்படி  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web