புதிய உச்சம் தொட்ட தங்கம்... சவரன் ரூ70000ஐ கடந்தது... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஏப்ரல் 12ம் தேதி சனிக்கிழமை பௌர்ணமி நாளில் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8770க்கும், சவரனுக்கு ரூ200 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ70160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தங்கம் முதன் முறையாக வரலாறு காணாத விலை உயர்வை பெற்று சவரன் ரூ70160ஐ தாண்டியுள்ளது. கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ 4360 உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்று கொண்டது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் ஆகியவைகளால் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிக அளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 1 ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62000ஐ தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என பிப்ரவரி 25 ம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ம் தேதி ரூ 61,960 ஆக இருந்தது.
ஏப்ரல் 1 ம் தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ 68,080-க்கும் ஏப்ரல் 2ம் தேதி மாற்றமில்லாமல் அதே விலையிலும் நேற்றைய தினம் ரூ 68,480க்கும் அதாவது சவரனுக்கு ரூ 400 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஏப்ரல் 12 ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 70,160-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,770-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுவிட்டது. தற்போது சவரன் ரூ 70000ஐ தாண்டிவிட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!