ரூ.1.04 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை... ஒரே நாளில் 2வது முறையாக உயர்வு!
சென்னை: தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்று காலை ஒருமுறை விலை உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மீண்டும் விலை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இன்று (டிசம்பர் 27) காலையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், மாலை நிலவரப்படி மீண்டும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனை ஆகிறது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலையிலேயே தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்ந்திருந்தது. அப்போதே ஒரு சவரன் ரூ.1,04,000 என்ற நிலையை எட்டியது. ஆனால், மாலை நிலவரம் அந்தச் சாதனையை முறியடித்து இன்னும் அதிகரித்துள்ளது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது: காலை கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,74,000-க்கு விற்பனையானது. மாலை மீண்டும் கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.283-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், மத்திய வங்கிகளின் கையிருப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது காட்டும் அதீத ஆர்வம் போன்றவை இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கம், இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து ரூ.1,04,800-ஐத் தொட்டிருப்பது நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
