மீண்டும் தங்கம் விலை உயர்வு! சவரனுக்கு ரூ.240 அதிகம்!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இன்றைய காலை நேர விலை நிலவரப்படி ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்துள்ளது.  தங்கத்தின் விலை, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், தை மாதம் முழுவதுமே பெரும்பாலும் அதிகரித்தப்படியே உள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Gold

முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், அதானி பிரச்சனை ஷேர் மார்க்கெட்டில் எதிரொலித்து, பங்கு சந்தை வர்த்தகம் அதள பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதும் தங்கத்தின் தொடர் விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகின்றன. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 30 ரூபாய் உயர்ந்து, ரூ.5,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ரூ.42,920-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,470-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் உயர்ந்து, ரூ.4,395-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும

From around the web