காலையில் ஏறி மாலையில் இறங்கிய தங்கம்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்தது. இது முதலீட்டாளர்களுக்கு லாபமாக இருந்தாலும், நகை வாங்கும் மக்களுக்கு அதிர்ச்சியாக மாறியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870 ஆனது. அதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.283 ஆக இருந்தது.

ஆனால், மாலையில் தங்கம் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.12,800 ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.6,000 குறைந்து ரூ.2,77,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
