தங்கம் விலையில் திடீர் சரிவு... சவரனுக்கு ரூ.1,720 குறைவு!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. கடந்த 13-ந் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து ஏற்றம் கண்டு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தையும் தாண்டியது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.1,135-ம், சவரனுக்கு ரூ.9,080-ம் உயர்ந்திருந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.14,415-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்தை எட்டியது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும், கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
