தங்கம் விலை கிடுகிடு உயர்வு... மாத இறுதி நாளில் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் ஏற்றத் தாழ்வுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வார தொடக்கத்தில் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்வு ஏற்பட்டது. தொடர்ந்து அடுத்த நாட்களிலும் உயர்வு காணப்பட்டது. பின்னர் இரண்டு நாட்கள் சிறிய சரிவு ஏற்பட்டதால் வாங்குவோர் சற்றே நிம்மதி அடைந்தனர்.

ஆனால் வார இறுதி நாளில் மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்து 15,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து 1,21,600 ரூபாயாகியுள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி 3 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. விலை ஏற்றம் மேலும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
