4 வது நாளாக தங்கம் விலை சரிவு… நகைப் பிரியர்கள் உற்சாகம் !
தமிழகத் தலைநகரில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கும், ஒரு பவுன் ரூ.640 குறைந்து ரூ.1,20,960-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து 4 வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வருகிறது.

இந்த வாரத்தின் தொடக்கம் முதலே தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருகிறது. மார்ச் 2 அன்று பவுனுக்கு ரூ.920 குறைந்தது. மார்ச் 3 அன்று ரூ.1,560 குறைந்தது. மார்ச் 4 அன்று மேலும் ரூ.2,120 குறைந்தது. இதனால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் பவுனுக்கு மொத்தம் ரூ.5,240 வரை தங்கம் விலை குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. உலகளவில் பதற்றமான சூழல் இருந்தாலும் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும் வரும் நாட்களில் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
