தொடர் சரிவில் தங்கம்... வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி!
2026ஆம் ஆண்டு தொடங்கியதும் தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. ஜனவரி மாதம் பல முறை உயர்ந்த விலை, பிப்ரவரி மாதம் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்ததால், மார்ச் 1ஆம் தேதி தங்கம் விலை மாற்றப்பட்டது.

படிப்படியாக விலை குறைந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,120க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.1,20,960, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,030, சவரனுக்கு ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றும் விலை குறைந்து வருகிறது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,960, சவரனுக்கு ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,900க்கும், சவரனுக்கு ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.290, ஒரு கிலோ ரூ.2,90,000க்குக் குறைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
