வார இறுதியில் குறைந்த தங்கம் விலை... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தபடி உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது. அந்த வகையில் ஜூன் 14ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது.
அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் 21ம் தேதி முதல் தங்கம் விலை சரிவையே சந்தித்து வருகிறது. 21ம் தேதி கிராமுக்கு ரூ.9,235-க்கும், சவரன் ரூ.73,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 22ம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 23ம் தேதி சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்னையானது. அதே நேரத்தில், 26 மற்றும் 27 தேதிகளில் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985-க்கு விற்பக்கப்பட்டது. சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71,880-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 8,930 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71,440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!