தங்கம் விலை அதிரடி சரிவு.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

இந்திய பங்குச்சந்தை உயர தொடங்கியதன் காரணமாக நேற்று தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வருடத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்றத்தை தொட்டு வருகிறது. அதே போன்று ஒரு சில நாட்களில் குறைந்தும் வருகிறது. அடுத்த நாளே 3 மடங்கு ஏறியும் விடுகிறது.  

அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்பு, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் பதற்றங்கள், பங்குச்சந்தை கடும் சரிவு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி சவரன் ரூ.62,000யைத் தாண்டியது தங்கம் விலை. உட்சக்கட்டமாக இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம்
மார்ச் 1ம் தேதி சவரனுக்கு மேலும் 160 ரூபாய் குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ரூ 63,520-க்கு விற்பனையானது. மார்ச் 4ம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ.8,010-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

மார்ச் 5ம் தேதி சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரனுக்கு ரூ 64,520-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ 360 சரிந்ததால் மக்கள் உற்சாகம் அடைந்தனர். இதனால் சவரன் ரூ 64,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் திடீரென தங்கம் விலை அதிகரித்தது. ஒரு சவரனுக்கு ரூ 320 உயர்ந்து சவரன் ரூ 64,480-க்கு விற்பனையானது. 

இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!

ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மார்ச் 7ம் தேதி  நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7990க்கும், சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன்  ஆபரணத் தங்கத்தின் விலைரூ 63,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web