தங்கம் விலை அதிரடி சரிவு... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த செவ்வாயன்று ஒரே நாளில் இரண்டு முறை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.73,400-க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ920 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7210க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!