புத்தாண்டு நாளில் தங்கம் விலை சற்றே சரிவு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை சமீப நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. தொடர்ந்து விலை உயர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என புதிய உச்சத்தை எட்டியது. அதே நாளில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என்ற விலையில் விற்பனையானது.
இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி முதல் தங்கம், வெள்ளி விலையில் சற்று சரிவு காணப்பட்டது. விலை மேலும் உயருமோ என்ற அச்சத்தில் இருந்த மக்களுக்கு இந்த இறக்கம் ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், இது தற்காலிக மாற்றம் மட்டுமே என தெரிவித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.12,440க்கும், ஒரு பவுன் ரூ.320 குறைந்து ரூ.99,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.256க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. இனி வரும் நாட்களிலும் விலையில் ஏற்ற இறக்கம் தொடரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
