சரிய தொடங்கியது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.640 குறைந்தது!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக, இந்தியாவிலும் தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், நேற்று அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, இன்று குறைந்துள்ளது.

நேற்று ஒரு சவரன் ரூ. 1,16,000-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 640 குறைந்து ரூ. 1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலையில் ரூ. 80 குறைந்து, இன்று ரூ. 14,420-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்த போதிலும், வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம்: ரூ. 270 ஒரு கிலோ: ரூ. 2,70,000

தங்கம்

நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,160 வரை உயர்ந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு ஓரளவுக்கு நிம்மதியைத் தந்துள்ளது. எனினும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் விலை ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் நிலைபெற்றுள்ளது சாமானியர்களுக்குச் சவாலாகவே உள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமண சீசன் நெருங்குவதால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!