மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.. ஜெட் வேகத்தில் வெள்ளி விலையும் பறக்கிறது!
கடந்த 2025-ம் ஆண்டிலேயே தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. 2026 புத்தாண்டு தொடக்கத்தில் சற்று குறைந்திருந்த விலை, தற்போது மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை ஒரு கிராம் (22 கேரட்): நேற்று ரூ.12,830-க்கு விற்ற தங்கம், இன்று ரூ.40 உயர்ந்து ரூ.12,870 ஆக உள்ளது. நேற்று ரூ.1,02,640-க்கு விற்பனையான தங்கம், இன்று ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960 என்ற நிலையை எட்டியுள்ளது.

இன்றைய வெள்ளி விலையும் தாறுமாறான உயர்வு கண்டுள்ளது. தங்கத்தை விட இன்று வெள்ளி விலைதான் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.271க்கு விற்ற வெள்ளி, இன்று ரூ.12 உயர்ந்து ரூ.283 ஆக உள்ளது.
நேற்று ஒரு கிலோ ரூ.2,71,000-க்கு விற்பனையான வெள்ளி, இன்று ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்து ரூ.2,83,000 என்ற இமாலய விலையை எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்துள்ளது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் உள்நாட்டில் தங்கம் விலை உயர ஒரு முக்கிய காரணமாகும். வெள்ளியைப் பொறுத்தவரை, மின்சார வாகனங்கள் (EV) மற்றும் சூரிய ஆற்றல் (Solar Energy) தயாரிப்பில் வெள்ளியின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளதே இந்தத் திடீர் விலையேற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
