தங்கம் விலை அதிரடி உயர்வு... ஒரே நாளில் ரூ.160 அதிகரிப்பு!

 
தங்கம்

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (டிசம்பர் 3, 2025) மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு நேற்று இருந்த விலையைவிட ரூ.20 உயர்ந்து, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.96,480-க்கு விற்பனையாகிறது. (நேற்று இதன் விலை ரூ. 96,320 ஆக இருந்தது.)

தங்கம்

வெள்ளி விலையும் கிராமுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 5 உயர்ந்து, இன்று ரூ. 201-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 2,01,000-ஆக உள்ளது. தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகரும் தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்திருப்பது நகைப்பிரியர்களை யோசிக்க வைத்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!