ஜெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை... மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு!

தங்கம் விலை ஜெட் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிற நிலையில், தங்கத்தின் விலை மேலும் உயரக் கூடும் என்றே பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ80 உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக சற்றே குறைந்து வந்த தங்கம் நேற்று மீண்டும் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை மாா்ச் 20ம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், மாா்ச் 21 ம் தேதி சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கும், மாா்ச் 22ம் தேதி மீண்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840-க்கும், மாா்ச் 23ல் விலை மாற்றமும் இன்றி விற்பனையானது.
மார்ச் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.8,185-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65,480-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்று கிராமுக்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109.90-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!