வரலாறு காணாத புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலைகள்!
இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,120க்கு விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவருகிறது. ஒரே வாரத்தில் சவரன் விலை பல ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.12,000 உயர்ந்து ரூ.2,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.287 ஆக உள்ளது. இந்த திடீர் உயர்வு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
